பார்த்திபன் செயலால் விஷால் அதிர்ச்சி!!

549

Vishal

பார்த்திபன் என்றாலே வித்தியாசத்துக்கு பெயர் போனவர் என்பது எல்லாருக்கும் தெரியும். தற்போது இவர் இயக்கி முடித்து இருக்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் பல புது முகங்கள் இருந்தாலும் சில காட்சிகளில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, அமலாபால் போன்றவர்களும் கௌரவ வேடத்தில் நடித்து உள்ளனர்.

படத்தை பொறுத்த வரை தம்பி ராமையா படத்திலும் இயக்குனராக நடித்து உள்ளனர். அவர் எடுக்கும் படத்தில் தான் இந்த புது முகங்களும் மற்றும் சினிமா நடிகர்களும் நடிப்பது போல் காட்சி உள்ளது. என்ன தான் பல பிரபலங்கள் நடித்து இருந்தாலும் விஷால் ஒரு படி மேல் போய் தான் அன்பை பார்த்திபனிடம் காட்டியுள்ளார்.

அதாவது கதைப்படி விஷால் குறிப்பிட்ட இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றுவார். அவரது போர்ஷன் எடுக்கும் போது 11 மணிக்கு வர சொன்னால் காலை 9 மணிக்கே ஆஜராகி பார்த்திபனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.அதோடு, வந்த வேகத்திலேயே தான் நடிக்க வேண்டிய காட்சியைப்பற்றி கேட்டு விட்டு டயலாக் பேப்பரை கையில் வாங்கிய விஷால், அரை மணி நேரத்தில் கேமரா முன்பு வந்து நின்று விட்டாராம்.

இதை பார்த்த பார்த்திபனுக்கு ரொம்ப சந்தோசம், சரி அவர் போர்ஷன் முடிந்ததும் கவரில் 2 லட்ச ருபாய் செக்கை கொடுத்தாராம், ஆனால் அதை விஷால் வாங்காமல் மறுத்து நான் உங்கள் இயக்கத்தில் நடிக்க மட்டும் தான் வந்தேன் என்று சொல்லி விடாப்பிடியாக வாங்க மறுத்து விட்டாராம்.ஆனால் விஷாலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை பார்த்திபனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

2 லட்சம் மதிப்பில் ஒரு பரிசு பொருளோடு அவர் வீட்டுக்கு என்ட்ரி கொடுத்தாராம் பார்த்திபன்.பணம் கொடுத்த தானே வாங்க மாட்டிங்க அதான் பரிசோடு வந்திருக்கிறேன் என்று தனக்கே உரிய கலகலப்பான பேச்சால் சொல்லியுள்ளார். வேறு வழியில்லாமல் அந்த பரிசை வாங்கி கொண்டாராம் விஷால்.