வெளிநாட்டில் கைதான மூவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!!

622

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் வெளிநாட்டில் கைதான நிலையில் அவர்களை இன்று (07) இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.