மீண்டும் சூடுப்பிடிக்கும் மலேசிய விமான தேடுதல் வேட்டை!!

469

FLight

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பினை, தற்போது நெதர்லாந்தின் ஃபக்ரோ என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.

இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

ஆனால் அங்கு விழுந்தது ஏதும் விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் விமானம் குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில், விமானத்தை தேடும் பொறுப்பு நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபக்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஃபக்ரோ நிறுவனம் நிபுணர்கள் உதவியுடன் விமானத்தை தேடும் என அவுஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.