மாறிவிட்ட ஜனாதிபதி அனுரவின் சட்டை பொத்தான் : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!!

1724

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்தபோது, அவரது ஆடையின் பொத்தான் மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பின்னர் ஜனாதிபதி அநுரகுமார, அந்த பொத்தான் சிக்கலை சரி செய்யும் வீடியோவும் வெளியிடப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுர குமார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாடு பிப்ரவரி 11 முதல் 13 வரை துபாயில் நடைபெறுகிறது.



அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒரு விழாவில் தனது கால்சட்டையை உயர்த்திவிடும் புகைப்படம் அக்காலத்தில் இதே போன்று பரவியது குறிப்பிடத்தக்கது.