தவறு என்றால் தட்டி கேட்பேன்: கோபத்தில் கொந்தளிக்கும் டோனி!!

436

Dhoni

தவறு செய்தால் யாராக இருந்தாலும் நான் எதிராக தான் இருப்பேன் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டின் 2வது நாள் உணவு இடைவேளையின் போது, இந்திய துடுப்பாட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவுடன் வாக்குவாதம் செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அண்டர்சன் அவரை திட்டி, தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ் விசாரித்தார். இதில், ஜடேஜாவை மிரட்டும் வகையில் பேசியது உண்மை தான், என அண்டர்சன் ஒப்புக் கொண்டார்.

இருப்பினும். இதற்கு போதிய ஆதாரம் இல்லாததால், இருவரையும் கார்டன் லீவிஸ் விடுவித்தார். அண்டர்சனுக்கு தடை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இவர் விடுவிக்கப்பட்டது, அணித்தலைவர் டோனிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது பற்றி அணித்தலைவர் டோனி கூறுகையில், இந்த சம்பவத்தின் போது, ஒரு சில கடினமான வார்த்தைகள் பேசியிருக்கலாம். ஆனால், இதை நாங்கள் புகாரில் குறிப்பிடவே இல்லை. அண்டர்சன், ஜடேஜாவை தள்ளி விட்டார் என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு.

இதில் ஜடேஜாவுக்கு மட்டும் அபராதம் விதித்தனர். அப்போதே, இவர் மீது ஒரு சதவீதம் கூட தவறு இல்லை எனத் தெரிவித்தேன். கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுவித்தது நல்ல விடயம்.

இதில், போட்டி நடுவர் டேவிட் பூன் பார்வையில், ஜடேஜாவின் செயல் தவறாக பட்டதால், 50 சதவீதம் அபராதம் விதித்தார். இது ஐ.சி.சி.,க்கு தெரியாதது சற்று வித்தியாசமாகத் தான் உள்ளது.

என்னைப் பொறுத்தவரையில் தவறு செய்தால், அது யாராக இருந்தாலும் எதிராகத்தான் இருப்பேன். எனது சக வீரர் எல்லை மீறாத நிலையில், அபராதம் விதிக்கப்பட்டால், எப்படியும் அவருக்கு ஆதரவாகத்தான் இருப்பேன்.

எது சரி, எது தவறு என்று எனக்குத் தெரியும். ஜடேஜா விடயத்தில் சரி என்று பட்டதை செய்தேன் என்று கூறியுள்ளார்.