கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன், பின்னர் அந்த பெண் துப்பாக்கியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தை வெட்டி மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன, நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, வெளியேற முயன்ற போது, அவருக்கு அருகில் அருகில் சென்று அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.