
தனுஷ், அமலாபால் ஜோடியாக நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ராம கிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த படம் தமிழகம் முழுவதும் ரிலீசாகி தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.
வேலை இல்லாமல் இருக்கும் தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தன்னை படிக்க வைத்ததால் வேலை கிடைக்கவில்லை என்றும், தம்பியை புனித ஜான் பள்ளியில் படிக்க வைத்ததால் வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவது போல் படத்தில் வசனம் உள்ளது.
ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக்தினரும், மாணவர்களும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகா சார்பில் முற்றுகை போராட்டமும் நடந்தது. சேலம் ராமகிருஷ்ணா மினஷன் ஆசிரம செயலாளர் சுவாமியதாத்மானந்தரும் வசனத்தை நீக்கும்படி தனுசுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து ராம கிருஷ்ண மிஷன் பள்ளி பற்றி சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது. இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை.
இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்றார்.





