தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

484

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில் இன்று (12.03.2025) தங்கத்தின் விலையானது அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 863,810 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,470 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 243,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 27,940 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 223,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.



மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,670 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 213,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.