மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!!

1301

அம்பாறை – மத்திய முகாம் நகரத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் மத்திய முகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடைய மத்திய முகாம் 06 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டு்ள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.