வவுனியா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கான புதிய விடுதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு!!

529

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட வைத்திய நிபுணகளுக்கான விடுதி இன்று காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட 22 மில்லியன் ரூபா கொடை நிதியில் இந்த மூன்றுமாடி விடுதிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சந்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் மற்றும் வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Vavuniya V2v1