கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு!!

492

Kathi

கத்தி, புலிப்பார்வை படங்களை திரையிட தமிழீழ ஆதரவு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு..

விஜய், சமந்தாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நெருக்கமாக உள்ளது. எனவே இந்த நிறுவனம் எடுக்கும் கத்தி படத்தை திரையிடக்கூடாது.

புலிப்பார்வை படத்தில் தமிழீழ விடுதலை போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் போரில் ஈடுபட்டது போல் சித்தரித்து உள்ளனர். சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவது போன்று எடுக்கப்பட்ட இந்த படத்தையும் தடை செய்ய வேண்டும். எதிர்ப்பை மீறி இவ்விரு படங்களையும் திரையிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.