இணையத்தில் பரவும் திரிஷாவின் போலி திருமணப் படங்கள்!!

444

Trisha

நடிகை திரிஷாவின் போலி திருமணப் படம் இணையத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித், ஜெயம் ரவி படங்களில் திரிஷா தற்போது நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களும் கைவசம் உள்ளன. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. பட விழாக்களில் இருவரும் ஜோடியாக பங்கேற்று வந்தார்கள். வெளிநாடுகளிலும் ஒன்றாக சுற்றினார்கள்.

நண்பர்களாகதான் பழகுகிறோம் என்று பிறகு இருவரும் விளக்கம் அளித்தனர். திரிஷாவுக்கு 31 வயது ஆகிறது. அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் திரிஷாவுக்கு திருமணம் நடப்பது போன்ற படம் ஒன்று திடீர் என இணையத்தில் பரவியது. திரிஷா பட்டுப் புடவையுடன் மணககோலத்தில் உட்கார்ந்து இருந்தார். அருகில் பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளை போன்று ஒருவர் அமர்ந்து இருந்தார். படத்தை பார்த்தவர்கள் அருகில் இருந்த நபருடன் திரிஷாவுக்கு திருமணம் நடந்துவிட்டதாக கருதினர்.

இதனை பேஸ்புக், டுவிட்டர்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். விசாரித்தபோது அது உண்மையான படம் அல்ல என்று தெரிந்தது. திரிஷா அருகில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்தவர் கன்னட நடிகர் புனித்ராஜ் குமார். கன்னட படத்தில் இருவரும் திருமண காட்சியொன்றில் இது போன்று நடித்து உள்ளனர். படத்தை விளம்பரபடுத்த இந்த படத்தை இணயத்தில் வெளியிட்டுள்ளனர்.

புனித்ராஜ் குமாரை பலருக்கு தெரியாது என்பதால் நிஜமாகவே திருமணம் நடந்துள்ளது என்று நம்பிவிட்டார்கள். எற்கனவே ராஜாராணி தமிழ் படத்துக்காக நயன்தாரா ஆர்யா திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். அதே பாணியில்தான் திரிஷாவின் திருமணப் படமும் வந்துள்ளது.