
பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் தனது 10வது இரட்டைச் சதத்தை பெற்றுக்கொண்ட சங்கக்கார அதிக இரட்டைச் சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.12 இரட்டைச் சதங்களுடன் சேர் டொன் பிரட்மன் முதலிடத்தில் இருக்கின்றார்.
மேலும் 3 இரட்டைச் சதங்களை பெரும் பட்சத்தில் அதி கூடிய இரட்டைச் சதங்களை பெற்ற வீரர் என்ற சாதனை சங்கக்கார வசமாகும். சங்கக்கார ஓய்வு பெறுவதற்குள் இச் சாதனையை முறியடிப்பார் என்று நம்பப்படுகின்றது.
நேற்று சங்கக்கார இரட்டைச் சதம் பெற்றுக்கொண்டதன் மூலம் 64 ஆண்டுகளுக்கு சேர் டொன் பிரட்மனால் 12 தடவைகள் 190 ஓட்டங்களுக்கும் மேல் பெற்றுக் கொண்ட சாதனையை முறியடித்த சங்கக்கார 13வது தடவையாக 190 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொண்டார்.
மேலும் நேற்றைய தினம் தனது 37வது சதத்தை பெற்றுக்கொண்ட சங்ககார டிராவிட்டை பின்தள்ளி நான்காம் இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் 2014ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கக்காரவின் வெற்றிப் பயணம் தொடர இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக நாமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.





