மூவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று கூறிய இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் கண்டனம்!!

987

Murukan

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பழ. நெடுமாறன் அவர்கள்..

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைந்து விட்ட நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அவர்களுக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்வது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் இது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.