இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கு ஆபத்து!!

625

User Name

இணையத்தில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், மின்னஞ்சல் முகவரிகள் என்பனவற்றுக்கு அடிக்கடி சோதனைகள் ஏற்படுவதுண்டு.

தற்போது உலகிலுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் கும்பல் ஒன்று சுமார் 1.2 பில்லியன் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் என்பவற்றுடன் 500 மில்லியன் வரையானவர்களின் மின்னஞ்சல் முகவரிகளையும் கொண்டுள்ளதாக இணைப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு நடவடைக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.