யாழில் ஒரு பிள்ளையின் தாய் கடற்கரையில் சடலமாக மீட்பு!!

288

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(4) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தும்பளை கிழக்கை சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரின் சடலமே கடலில் மூழ்கிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.



இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.