இரு கால்களும் முடியாத நிலையில், படிப்பிற்காய் துடிக்கும் மாணவியின் சோகம்!!

670

முல்லைத்தீவு புதுக்குடியிப்பு 10ம் வட்டாரத்தை சேர்ந்த பவிதா நாகராஜா என்ற பெண் கடந்த 2012ம் ஆண்டு 9ம்மாதம் 20ம்நாள் அன்று பல்கலைக்கழக விடுமுறையில் வந்து நின்றபோது வீட்டில் குப்பைகளை எரியூட்டியபோது வெடிபொருள் வெடித்ததில் மிகவும் படுகாயமடைந்து மிகமோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இவர் திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தாய்.யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவி.

மிகவும் ஒளிமயமான இவரின் எதிர்காலத்தில் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட வெடிபொருள் தாக்கம் இவரை மிகவும் உடல் உள ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மிகவும் கண்ணீருடன் புலம்பெயர் உறவுளிடம் இவர் வேண்டிக்கொள்வது இவருக்கு வெடிபொருள் பாதிப்பினால் கால்கள் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள தசை அதீதமாக வளரும் (heloid scar) இந்த நோயை சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்த வைத்திய ஆலோசனைகளின்படி பல இலட்சம் ரூபாய்கள் தேவையாகி இருக்கின்றது.

அந்த அளவு பணம் பவிதா என்ற இந்த சகோதரியிடம் இல்லை. எனவே இரக்கமுள்ள நெஞ்சங்களே! உடல் உள பாதிப்பால் அவதியுறும் இந்த சகோதரிக்கு உதவி இவர் சத்திரசிகிச்சை மூலம் சுகவாழ்வு பெறவும் தன் பல்கலைக்கழக கல்வியை உபாதைகள் இன்றி நிறைவுசெய்யவும் உங்களால் மட்டுமே முடியுமென நம்புகின்றோம்.

நன்றி
பவிதா நாகராஜாவின் தொலை.இல.0776385827
PAVITHA NAGARAJA
AC 162200140041423
PEOPLES BANK OF SRILANKA
JAFFNA UNIVERCITY BRANCH

-கனடா மிரர்-

1 2 3 4 5