கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 21 வயது இளைஞன் பரிதாபமாக பலி!!

244

கொழும்பு பானதுறை வளான பகுதியிலே ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் பானதுற ரயில்வே நிலைய வீதியில் உள்ள S.S Motors நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர் என தெரியவந்துள்ளது.

இவர் நேற்று இரவு, தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தொட்டவத்தை பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு லொரியின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.