நாட்டில் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை!!

295

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இன்று (12) பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொதுமக்களை அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.