உடலில் 5 இடங்களில் பச்சை குத்திய சுருதி ஹாசன்!!

857

Sruthi

நடிகைகள் பலர் பச்சைக் குத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடம்பில் விதவிதமாக பச்சை குத்தி வைத்துள்ளார்கள். திரிஷா மூன்று தடவை பச்சை குத்தி உள்ளார். முதலாவது நெமோ என்ற கார்ட்டூன் பட மீனை பச்சை குத்தி இருந்தார்.

நயன்தாரா முதுகில் தேளையும் கையில் பிரபு என்ற பெயரையும் பச்சை குத்தி இருந்தார். நமீதா முதுகில் பச்சை குத்தி இருந்தார். ரீமாசென் வயிற்று பகுதியில் பறவையை பச்சை குத்தி இருந்தார். தமன்னா, காஜல் அகர்வால், அசின், பிரியாமணி, உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் தங்களுக்கு பிடித்தமானதை உடம்பில் பச்சை குத்தி வைத்துள்ளனர்.

சுருதி ஹாசன் ஏற்கனவே தனது பெயரை தமிழில் முதுகில் பச்சை குத்தி இருந்தார். அதன் பிறகு, கையில் ரோஜா மலரை பச்சை குத்தினார். காலிலும் பச்சை குத்தி இருந்தார். தற்போது ஐந்தாவது தடவையாக கையில் பச்சை குத்தி உள்ளார். முன்னாள் கதாநாயகிகள் குஷ்பு, சினேகா, சிம்ரன் போன்றோரும் பச்சை குத்தியுள்ளனர்.