வவுனியா உக்குளாங்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா!!

786

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஜய வருட ஆடி 28ம் நாள் நாளை (13.08) புதன்கிழமை பகல் 11.00 மணியளவில் கொடி ஏற்றபட்டு தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்று (22.08) வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக தினமாகிய புனர்பூச நட்ச்சத்திரத்தன்று 1008 சங்காபிசேகமும் தீர்த்தோற்சவமும் நடைபெற்று இனிதே உற்சவம் நிறைவுபெறும்.

திருவிழா 10 தினங்களும் மகேஸ்வர பூசை (அன்னதானம்) நடைபெறும் எனவும் தினமும் காலை 6.00 மணி தொடக்கம் 7.00 மணிவரை இன்தமிழ் இனியன் வாசன் ஆசிரியர் அவர்களின் சமயச் சொற்பொழிவு இடம்பெறும்.

இன் நிகழ்வுகளில் பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
koomankulam