திருமண நிகழ்வில் புகையால் 7 வயதுச் சிறுமி மூச்சுத்திணறி பலி!!

33

மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் இணைந்து வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கி படம் பிடித்து கொண்டிருந்தனர் வீடியோகிராபர்கள்.

அப்போது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்த 7 வயது சிறுமி வாஹினி என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வாஹினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் இந்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமான தருணத்திலும் சிறுமியின் பெற்றோர் தங்களது மகளின் கண்களை தானமாக கொடுக்க முடிவு செய்தனர்.

இது குறித்து சிறுமியின் தந்தை எங்கள் மகள் இப்போது இல்லை என்றாலும் அவளுடைய கண்கள் வேறு ஒருவருக்கு பார்வை தரும் என்பதை நினைத்தாலே மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.