
சினிமா உலகில் 10 வருடங்களைக் கடந்தும் முன்னணி நாயகியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் திரிஷா. இவர் முதலில் மௌனம் பேசியதே படம் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்த திரிஷா, சாமி, கில்லி படம் இவருக்கு முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை ஏற்படுத்தியது.
முன்னணி நடிகர்களான கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஆர்யா, விஷால், உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவருடைய சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நடிகர் நடிகைகள் சமூக வலைத் தளங்களில் தங்களுக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்குவதை வாடிக்கையான ஒன்றாக வைத்து வருகிறார். அந்த வரிசையில் திரிஷா தற்போது பேஸ்புக் இணைய தளத்தில் மட்டும் 1 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார். இவ்வளவு ரசிகர்கள் கிடைத்தது சந்தோஷமாக இருப்பதாகவும், அவர்களுக்கு நன்றியையும் திரிஷா தெரிவித்துள்ளார்.
திரிஷா தற்போது அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள பூலோகம் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.





