இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
மெத்யூஸ் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கட் அணியின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக மெத்யூஸ் கருதப்படுகின்றார்.
கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடக் கிடைத்தமை பெருமிதமானதும் மகிழ்ச்சியானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அணிக்காக விளையாடும் போது ஏற்படும் உணர்வினை வார்தைகளினால் விபரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கிரிக்கட் பயணத்தில் தனது ஏற்றத் தாழ்வுகளின் போது தொடர்ந்தும் ஆதரவு வழங்கிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி பாராட்டுவதனை பெரும் பாக்கியமாக கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளையாட்டின் மீதான காதல் எப்போதும் தீராது என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.