86 வயது தந்தையை 11 மாதங்களாக கட்டிப்போட்டு வைத்த மகள் கணவருடன் கைது!!

556

Old man

வீட்டினுள் தனது தந்தையை கட்டிப் போட்டு வைத்திருந்த மகள் ஒருவரும் அவரது கணவரும் வெலிஹேபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – வெலிஹேபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் 86 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த முதியவர் 11 மாத காலமாக இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது தந்தை மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையினாலேயே அவரைக் கட்டி வைத்ததாக அவரது மகளான சந்தேகநபர் பொலிஸில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மீட்கப்பட்ட முதியவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களான தம்பதியரை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.