யாழில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகள்!!

613

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தியினால் இந்திய நாட்டின் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து துணைத் தூதுவரின் உரை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகள் கலந்து கொண்டார்கள்.

J1 J2 J3 J4