தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமில்லாதவர் : முன்நாள் வீரர்கள் குற்றச்சாட்டு!!

418

Dhoni

தோனி குறைந்த ஓவர் போட்டிகளுக்கே பொருத்தமானவர் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல இணையதளம் ஒன்றில் அவர் எழுதியுள்ள பத்தியில், டெஸ்ட் கிரிக்கெட்டை தோனி துறந்துவிட்டால் அவரது விந்தையான, கிரிக்கெட்டிற்குப் புறம்பான கப்டன்சியிலிருந்து இந்திய அணி விடுபடும்.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடாமல் சரணடைந்த போதும், தோனி அளித்த பேட்டியில் தோல்வி பற்றி பெரிதாகக் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

அவரது அணித் தேர்வு தர்க்கத்திற்குப் புறம்பானதாக உள்ளதோடு, களத்தில் வீரர்களைக் கையாள்வது, தடுப்பாட்டம் அமைப்பு போன்றவற்றில் சூழ்நிலைக்குத் தக்கவாறாக அவர் எதுவும் செய்வதில்லை. லோர்ட்ஸ் டெஸ்டில் இஷாந்த் சர்மாவை பவுன்சர் பந்துகள் வீச யோசனை சொன்னதாக அவர் கூறிய ஒன்று மட்டுமே விதிவிலக்கு.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அவரது ஆர்வமின்மையை அவரே பலமுறை சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஆகவே பணமோ அல்லது ஆட்டத்தின் வேகமோ வண்ணச் சீருடை, வெள்ளைப் பந்து, குறைந்த ஓவர் கொண்ட கிரிக்கெட் வடிவம்தான் தோனிக்குப் பொருத்தமாக இருக்கிறது, அதில் அவர் திறம்பட செயல்படுகிறார்.

கடந்த 2011 உலகக் கோப்பை போட்டிகளில் அவரது அணித்தலைமைப் பொறுப்பு தன்னம்பிக்கையுடனும் சீராகவும் இருந்தது. எனவே தற்போதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க அவர் திட்டமிடலாம்.

மேலும் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடியும், ஒரு டெஸ்ட் வீரராக அவர் எத்தனை நாட்கள் இப்படிப்பட்ட நிலையில் தொடர முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.