சுண்டைக்காய் கட்சியெல்லாம் மிரட்டுவது நகைச்சுவையாக உள்ளது : நடிகை குஷ்பு அதிரடி!!

660

Kushboo

நடிகை குஷ்பு ட்விட்டரில், சுண்டைக்காய் அளவே உள்ள கட்சி ஆள் எல்லாம் என்னை மிரட்ட முயற்சி செய்வதை நினைத்தால் கொமடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகை குஷ்பு, மக்களவைத் தேர்தலையடுத்து கட்சியில் இருந்து விலகியதோடு, சினிமா வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுண்டைக்காய் அளவு கட்சி ஆதரவில் ஒருவர் என்னை மிரட்ட முயற்சி செய்வது கொமடியாக உள்ளது.

மேலும் அவர்களின் பலவீனத்தை பார்த்து சிரிக்கத் தான் செய்கிறேன், நான் யாருக்கு பின்னாலும் நிற்கவில்லை என்றும் நான் என் மனசாட்சியை தவிர வேறு எதற்கும் பயப்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.