கோர விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

1265

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11.06.2025) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பரகொட, அலுதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து 41 வயதுடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.