வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!!

1056

Missing

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (15.08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் வசித்து வந்த ஐயாத்துரை யசோதரன் (49) என்ற குடும்பஸ்தர் வியாழன் இரவு 12.45 மணியளவில் வீட்டின் வெளியே சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அவரது உறவினர்கள் சிலருடன் கருத்து முறண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாபக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர் வெளிநாடு ஒன்றில் குறிப்பிட்ட காலம் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடாடபான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்