
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்யா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவி உயர்படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து கனடாவுக்கான இந்திய துணைத் தூதரகம் கால்கரி பல்கலைக்கழக இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.
இவரது திடீர் மறைவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





