வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற மோசமான சம்பவம் : அச்சத்தில் சிதறி ஓடிய பக்தர்கள்!!

3153

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றையதினம் (23) ஆலய பொங்கல் திருவிழாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு நாகதம்பிரானை வழிபட வருகை தந்திருந்தனர்.

வவுனியா மக்கள் மட்டுமல்லாது வேறு பிரதேச மக்களும் புதூர் நாகதம்பிரானை வழிபட பெரும் தொகையாக வருகை தந்திருந்ததுடன், காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர்களின் தாக்குதலால் நாகதம்பிரானை தரிசிக்க வந்த பக்தர்கள் அச்சத்தில் சிதறி ஓடியிருந்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், ஆலய திருவிழாவில் இளைஞர்களின் மோசமான செயலுக்கு சமூக ஆர்வர்கள் விசனக்களை வெளியிட்டு வருவதுடன், பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.