மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்!!

327

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கெலேகால பகுதியில் நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் மற்றும் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதைத் தொடர்ந்து, கெலேகால பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடனும் மோதி வீதியில் குடைசாய்ந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.