யாழ். பருத்தித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதலில் ஒருவர் படுகாயம்!!

555

யாழ்.பருத்தித்துறையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (22) என்ற இளைஞனே படுகாயமடைந்து பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த மோதல் சம்பவத்தில் யாழ் – கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

J1 J2