
பாமக நிறுவனர் ராமதாஸ், திரைப்படத்தில் நடிகர்கள் புகைபிடிக்க கூடாது என்று கூறிய கருத்துக்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ் தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.
மேலும் சமூக ஆர்வலர்கள் அந்த புகை பிடிக்கும் காட்சியினை எதிர்த்து உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து நடிகை குஷ்பு விடுத்துள்ள செய்தியில் தனுஷ் புகை பிடிப்பது போன்று நடித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததை வரவேற்றுள்ளார்.
மேலும், நடிகர்கள் செய்யும் நல்ல விடயங்களை யாருமே பாராட்டவோ பின்பற்றவோ செய்வதில்லை. ஆனால் புகை பிடிப்பதையெல்லாம் பிரச்சினையாக்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்று கூறியுள்ளார்.





