குடிக்க தண்ணீர் இல்லை : சட்​ட​விரோத​மாக இந்​தியா வந்த பாகிஸ்​தான் தம்​ப​தி​யினர் பாலைவனத்தில் உயிரிழப்பு!!

52

சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த பாகிஸ்​தான் தம்​ப​தி​யினர் பாலைவனத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்த தம்பதியினர் ரவிக்​கு​மார் (17) மற்றும் சாந்​தி​பாய் (15). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

இதில் ரவிக்குமாருக்கு வேலை இல்லாததால் தம்பதியினர் இந்தியா வர முடிவு செய்தனர். இதற்​காக இரு​வரும் விசா கேட்டு விண்​ணப்​பித்​தனர். ஆனால், விசா மறுக்கப்பட்ட நிலையில் சட்​ட​விரோத​மாக எல்​லை​யைக் கடந்து ராஜஸ்​தானுக்​குள் வந்தனர்.

அப்போது, ஜெய்​சால்​மர் பகு​தி​யிலுள்ள தார் பாலை​வனத்​தின் வழி​யாக பயணம் செய்த போது தம்பதியினர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் உடலில் நீர் சத்து குறைந்து உயிரிழந்துள்ளனர்.

அதாவது, அதி​கப்​படி​யான தாகத்​தால் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இவர்களது சடலமானது கடந்த 28-ம் திகதி கிடைத்துள்ளது.

இது குறித்து பொலிஸார் கூறுகையில், “தார் பாலை​வனத்​தி​லுள்ள பிபி​யான் பகு​தி​யில் இவர்​களது உடல்​கள் கிடைத்​துள்​ளன. இவர்கள் பெரிய அளவி​லான குடிநீர் கேனை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், குடிநீர் தீர்ந்து விட்டதால் அதிகப்படியான தாகத்தால் உயிரிழந்துவிட்டனர். தம்பதியினரின் உடல் அருகே காலியான குடிநீர் கேன் இருந்தது” என்றார்.