இந்திய அணியின் தோல்வியின் எதிரொலி : பயிற்சியாளர்கள் அதிரடியாக நீக்கம்!!

470

In

இந்திய அணியின் தொடர் தோல்வியை தொடர்ந்து, இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது.

கடந்த 3 டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் மோசமாக தோற்றனர். அதிலும் 4வது மற்றும் 5வது டெஸ்ட்டில் 3 நாளில் சரண் அடைந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது இந்திய அணி. இந்த டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்வியால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டது. இதன் மூலம் பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோடேவிஸ், களத்தடுப்பு பயிற்சியாளர் டிரெவர் பென்னி ஆகியோரை ஓய்வு என்ற பெயரில் கிரிக்கெட் சபை நீக்கியுள்ளது.

முன்னாள் வீரர்கள் சஞ்சய் பங்கர், பரத் அருண் ஆகியோரை உதவி பயிற்சியாளராகவும், ஆர்.ஸ்ரீதர் களத்தடுப்பு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.