இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனித்தனி வித்தியாசமான 10ரூபா நாணயக் குற்றிகள்!!

808

coin

இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டங்களுக்குமென்று வித்தியாசமான 10 ரூபா நாணயக் குற்றிகளை அறிமுகப்படுத்த மத்திய வங்கி ஆலோசித்து வருகிறது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களும் தனித்தனி 10 ரூபா நாணயக் குற்றிகளை கொண்டிருக்கும். எனினும் இந்த நாணயக்குற்றிகள் எவ்வாறு எந்தளவு தொகை விநியோகிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகவில்லை.

இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான 10 நாணயக் குற்றிகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொதுமக்கள் மத்தியில் 10ரூபா நாணயத் தாள்களுக்கு நம்பிக்கை குறைந்து போனமையை அடுத்தே நாணயக்குற்றிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

2010 ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நாணயத்தாள்களுக்கு பதிலாக 10 ரூபா குற்றிகள் அச்சிடப்பட்டன. இவை 11 பக்கங்களை கொண்டதாக இரும்பில் செய்யப்பட்டுள்ளன. இதன் நிறை 8.36 கிராம்களாக உள்ளன.