
தமிழகத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இளைஞர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌந்தர்யா. இவர் காஞ்சிபுரத்தில் அறையெடுத்து வேலை பார்த்து வந்தார். இவரும் தினேஷ் என்ற இளைஞரும் காதலித்த நிலையில், இருவரும் தங்கள் வீட்டில் கூறி சம்மதம் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தினேஷுக்கும், சௌந்தர்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் சௌந்தர்யாவை சந்தித்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்து தினேஷ் தப்பியோடிய நிலையில், பொலிஸார் சௌந்தர்யாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். இதையடுத்து தினேஷை வலைவீசி தேடிவந்த நிலையில், அவரே நாகையில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆண் நண்பர் ஒருவருடன் சௌந்தர்யா செல்போனில் பேசி வந்ததாகவும், அதனை அவர் கண்டித்தும் நிறுத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சௌந்தர்யாவை கொலை செய்ததாக கூறியிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





