
14 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வரும் 24 மணி நேர காலத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, குறித்த மாவட்டங்களில் சில நேரங்களில் மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதேவேளை, நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





