வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஒன்பதாம் நாளான (27.07.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை அபிசேகங்கள் மூலஸ்தான பூசை, யாகபூசை,கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை எட்டுமுப்பது மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து அம்பாள் உள்வீதி வலம்வந்து ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில் ஒருபுறம் ஆண்பக்த அடியார்களும் மறுபுறம் பெண் பக்த அடியார்களும் வடம் பிடிக்க திருவீதியுலா வந்தாள்.
சரியாக காலை பதினோரு மணியளவில் தேர் இருப்பிடத்தை அடைய அதன் பின் அர்ச்சனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து மதியம் ஒருமணியளவில் பச்சை சாத்தல் உற்சவமும் இடம்பெற்றது .






