
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தனது காரை பார்க்கிங் செய்த போது ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோக்ராஜ் சிங் அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது காரை நிறுத்தும் போது மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
அப்போது தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை யோகராஜ் சிங் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு சொத்து விடயத்தில் மோசடி செய்ததற்காக யோக்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரை பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.





