மழை காரணமாக இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி ரத்து!!

637

Ind

இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு மழை பெய்ததால் போட்டி தொடங்குவது தாமதமானது. தற்போது மழை மேலும் வலுவாக பெய்து வருவதால் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.