ஆந்திராவில் 6 இலங்கையர்கள் கைது!!

569

A6

வெளிநாட்டுக்கு அனுப்பப்படவிருந்த 6 இலங்கைத் தமிழர்களை ஆந்திர பிரதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 6 பேரும் விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ஆந்திர பிரதேச ஒன்கோல் பகுதியை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த இலங்கையர் ஒருவர் உட்பட்ட நான்கு பேரையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

6 இலங்கையர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த நான்கு பேரும் அவர்களிடம் இருந்து 5 இலட்சம் வரை பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் 6 பேரும் விசாகப்பட்டிண கரையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.