கணவன் தொல்லை தாங்காமல் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி!!

601

knife

தமிழ்நாடு, கரூரில் பெண் ஒருவர் தனது கணவன் எப்போதும் குடித்துவிட்டு சண்டைபோடுவதை தாங்கமுடியாமல் அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

குளித்தலை அருகே உள்ள மாடு விழுந்தான் பாறை கிராமத்தில் நடராஜன் (50) இவருடைய மனைவி மீனா (48) வசித்து வந்துள்ளனர்.
நடராஜன் எப்போதும் குடித்துவிட்டு மனைவியைப் போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் போதையில் வந்த நடராஜன், மீனாவிடம் தகராறு செய்துவிட்டு தூங்கியுள்ளார்.
ஆனால் கணவரின் செயலால் போபமடைந்த மீனா நள்ளிரவில் கணவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, நடராஜன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தகவலறிந்த குளித்தலை பொலிஸார், நடராஜனின் உடலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியதுடன் மீனாவை விசாரித்துள்ளனர்.

மேலும் பொலிசார் விசாரித்தபோது, முதலில் குடிபோதையில் நடராஜனே கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறிய மீனா, பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து மீனாவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.