ஒன்றறை வயதுக் குழந்தையைக் கொலை செய்த தந்தை!!

566

baby

பேருவளை மாகல்கந்த பிரதேசத்தில் ஒன்றரை வயது நிரம்பிய தனது குழந்தையை தந்தை ஒருவர் கற்தரையில் எறிந்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதேச விகாரையொன்றின் கற்தரை நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த குழந்தை களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிப்பட்ட போது உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப முறுகலே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை கற்தரையில் எறியப்பட்ட சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அதன் தாய் அங்கு இருக்கவில்லை எனவும், சந்தேகத்திற்குரிய தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்ற நிலையில் வாரத்தில் ஒரு தடவை ஒரு ஞாயிற்றுக் கிழமை தோறும் குழந்தையை தந்தைக்கு காண்பிப்பதற்காக அழைத்துச் செல்ல வேண்டும் என பொலிஸாரினால் முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, சந்திப்பதற்கான ஒரு இடமாக மாகல்கந்த பிரதேச விகாரையை பயன்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், 24.08.2014 அன்று குறித்த குழந்தையின் பாட்டியினால், அதனை தந்தையிடம் காண்பிப்பதற்காக விகாரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமான தனது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தந்தை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 29 வயதான குறித்த தந்தையை, மனநல வைத்தியரிடம் அனுப்பி வைத்திய அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா
ஆப்தீன் உத்தரவிட்டார்.

களுத்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் 25.08.2014 அன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செப்டெம்பர் 4ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.