வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் வார இறுதியில் வீதியோர சந்தை : தவிசாளர்!!

1808

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் 17.08.2025 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாராந்த சந்தை ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அறிவித்துள்ளார்.

“இச்சந்தையில் எமது பிரதேச முயற்சியாளர்களின் விவசாயத்துறை, கைத்தொழிற்துறைசார் உற்பத்திப்பொருட்களை வாராந்தம் விற்பனை செய்யமுடியும் எனவும்,

இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியும்” எனவும் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்பெற விரும்பும் முயற்சியாளர்கள், “வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, நேரியகுளம் வீதி, நெளுக்குளம், வவுனியா” எனும் அலுவலக முகவரிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அல்லது அலுவலக நேரத்தில் 024 2225737 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது முன்பதிவுகளை மேற்கொள்வதுடன் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.