வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த மகோற்சவம்!!

320

Nara

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று 11 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளதுடன் 5 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்கிகழமை கும்பாபிசேக தினத்தன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதுடன் சனிக்கிழமை 1008 சங்காபிசேகமும் இடம்பெறவுள்ளது.

ஆகம கிரியா பாவலர் சிவஸ்ரீ இரவீந்திர உமாசுதக் குருக்கள் பிரதம குருவாக பூஜை வழிபாடுகளை நடத்தவுள்ளதுடன் பிரமஸ்ரீ த.பிரசாந்சர்மா உட்பட பல சிவாச்சாரியார்கள் இணைந்து பூஜை வழிபாடுகளை நடத்தவுள்ளனர்.

10 நாட்கள் இடம்பெறவுள்ள இம் மகோற்சவ திருவிழாவில் தினமும் அன்னதாகமும் வழங்கப்படவுள்ளது. இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Nara