நிழல் உலக தாதாவால் ஷாருக்கானுக்கு ஆபத்து : பாதுகாப்பு அதிகரிப்பு!!

418

Shahrukh Khan

பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு நிழல் உலக தாதாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான ரவி பூஜாரியால் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகலில் ஷாருக்கானை தொடர்பு கொள்ள ரவி பூஜாரி முயற்சி செய்துள்ளான். இதனால் அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்த மும்பை பொலிசார் முடிவு செய்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மும்பை பொலிசார் முடிவெடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் பிரபல பொலிவுட் தயாரிப்பாளரான அலி மொரானியின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் ஐந்து சுற்று தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மும்பை பொலிசார் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.