வவுனியாவில் முன்மாதியான செயலைச் செய்த வவுனியா நகர ரோட்டரி கழகம்!!

2153

இன்றையதினம் (19.08.2025) வவுனியா நகர ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபையில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளித்து ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

வவுனியா மாநகர சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தூய்மைப் பணியாளர்களுக்கான சீருடைகள் மற்றும் அடிப்படை சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுதியும் வழங்கப்பட்டதுடன்,

மருத்துவ முகாம் நடாத்தப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் இலவச உடற்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதுடன் ரோட்டரி கழக உறுப்பினார்களால் மதிய உணவும் பரிமாறப்பட்டது.

வவுனியா நகர ரோட்டரி கழகத்தின் தலைவர் Rtn.நல்லையா ஸ்ரீஷ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வவுனியா மாநகர சபையின் முதல்வர் சு.காண்டீபன் துணை முதல்வர் ப.கார்த்தீபன், மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் செயலாளர் பாலகிருபன் உள்ளிட்ட மாநகரசபை உத்தியோகத்தர்களும் வவுனியா நகர ரோட்டரி கழக நிர்வாகிகள் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் வவுனியா மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.